TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா விடைகள்) - TAMIL GK 7

Latest

Tuesday, 13 February 2018

TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா விடைகள்)

1. பயிர்களின் மகசூலை பாதிக்கக்கூடிய எந்த ஒரு உயிரியும் ............... ஆகும். - தீங்குயிரி

2. தீங்குயிரிக்கு எடுத்துக்காட்டுத் தருக. - பூச்சிகள், பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பறவை, எலி போன்றவை.

3. தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்த ................... பயன்படுகிறது. - தீங்குயிர் கொல்லி

4. நெல்லின் பாக்டீரியா வாடல் நோய் எதன் மூலம் பரவுகிறது? - நீர்

5. பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டுத் தருக. - DDT (டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்), மாலத்தியான், மானோ குரோட்டோபாஸ் போன்றவை.

6. பூஞ்சைகளை கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பயன்படுபவை ................. - பூஞ்சைக்கொல்லி

7. பூஞ்சைக்கொல்லிக்கு எடுத்துக்காட்டுத் தருக. - போர்டோ கலவை, காப்பராக்ஸி குளோரைடு போன்றவை.

8. தேவையற்ற தாவரங்களை அழிக்கப் பயன்படுபவை .............. - களைக் கொல்லி

9. களைக் கொல்லிக்கு எடுத்துக்காட்டுத் தருக. - 2இ 4-னு (டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)

10. எலிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டுத் தருக - துத்தநாக பாஸ்பேட், ஆர்சனிக், வார்பெரின் போன்றவை.

11. மெல்லும் பூச்சிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக. - வெட்டுக்கிளி, கம்பளி பூச்சிகள்

12. தாவரங்களின் செல் சாற்றினை உறிஞ்சுபவை .................... - உறிஞ்சும் பூச்சிகள்

13. உறிஞ்சும் பூச்சிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக - இலைத் தத்துப் பூச்சிகள், அசுவணி (இலைப்பேன்) போன்றவை.

14. நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய் (டிக்கா நோய்) எதன் மூலம் பரவுகிறது? - மண்மூலம்

15. நெல்லின் வெப்புநோய், கோதுமையின் துரு நோய் எதன் மூலம் பரவுகிறது? - காற்று

No comments:

Post a Comment