New
- பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
- இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
- தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
- ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
- அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
- விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
- ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
- அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
- சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
- தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
- எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
- அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
- வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
- புவி நாட்டம் உடையது – வேர்
- இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
- டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
- ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
- முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
- நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
- மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
- அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
- தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
- எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
- புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
- ஆடு ஒரு தாவர உண்ணி
- தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்
- தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்
- விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்
- விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
- செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
- செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
- செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
- தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
- விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
- தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
- விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
- தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
- விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
- குளோரோபிளாஸ்ட் பணி – தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
- குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் – ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் – மஞ்சள் நிற நிறமி.
- குரோமோபிளாஸ்ட் பணி – பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
- லியூக்கோபிளாஸ்ட் பணி – தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
- செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
- நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
- மிகவும் நீளமான செல் நரம்புசெல்
- நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
- இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
- விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
- விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
- தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
- விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
- கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
- கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
- தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
- குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி – குளோரோஃபில் – பச்சை நிற நிறமி.
No comments:
Post a Comment