தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 03.04.2016 / 04.04.2016 - TAMIL GK 7

Latest

Sunday, 3 April 2016

தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 03.04.2016 / 04.04.2016

தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 03.04.2016 / 04.04.2016

1.இந்தியாவின் முதல் அதிவேக ரயில் கதிமான் வருகிற 05.04.2016 முதல் தனது சேவையே தொடங்குகிறது. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். இது சதாப்தி ரயிலின் வேகத்தைவிட 10-20 கிலோமீட்டர் அதிக வேகம் கொண்டது. கதிமான் ரயில் டில்லி - ஆக்ரா இடையே இயக்கபட உள்ளது.
2. இன்று (3.04.2016) ஆட்டிசம் தினம் (அறிவுத்திறன் குறைபாடுள்ளோர்) அனுசரிக்கப்பட்டது.
3.தேசிய பஞ்சாயத்து தினம் வருகிற 24.04.2016 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய பஞ்சாயத்து தினத்தை ஜாம்ஜெட்பூரில் கொண்டாட உள்ளார்.
4. மகாராஷ்டிரா மாநில அரசின் சமுக சேவைக்கான விருது பிரபல பாடகர் சங்கர் மகாதேவனுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வழங்கினார்.
5. வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக டிரான் டை குவாங் 02.04.2016 அன்று பதவிஎற்றுகொண்டார்.
6. நவீன சவூதி அரேபியாவை கட்டியமைத்தவராக கருதப்படும் அப்துல் அஜீஸ் அழ சவூதின் பெயரிலான அந்த நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அரசர் வழங்கி (03.04.2016) கௌரவித்தார்.
7. வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழல் மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா 12 வது இடத்தில இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
8. ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று (04.04.2016) மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி பதவி ஏற்க உள்ளார். மேலும் இவர்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலவராவார்.
9.சந்திரயான் 2 முற்றிலும் இந்தியாவின் தொலில்நுட்ப தயாரிப்பில் உருவாக்க படவுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
10. உலகின் முதல் வெள்ளைப்  புலிகள் சரணாலயம் இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் சாதனா மாவட்டத்தில் உள்ள முகுந்த்பூரில் 03.04.2016 அன்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
11. அமெரிக்காவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற 'ரெட்பிளாக்' போர்விமான பயிற்சி வருகிற 28.04.2016 முதல் 13.05.2016 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த போர் விமான பயிற்சியில் கலந்து கொள்கிறது.
12. டி20 உலக கோப்பை போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
13. மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
14. இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர்  ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் ரத்சனோக் இந்தனன் சாம்பியன் பட்டம் வென்றார்.
15. இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் நாட்டின் கெண்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஒருவரிச் செய்தி
  • இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  - விகாஷ் ஸ்வரூப்
  •  ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் புதிய தலைவர் - முகேஷ் குமார் சுரானா
  • தென்னாப்ரிக்காவின் அதிபர் - ஜேக்கப் ஜீமா
  • வடகொரியா நாட்டின் அதிபர் - கிம் ஜோங்-உன்
  • இஸ்ரோவின் தலைவர்  - ஏ.எஸ். கிரண் குமார்.
  • இந்தியாவில் முதல் வெள்ளைப் புலி மத்திய பிரதேச மாநிலத்தின் விந்திய மலைபகுதியில்  1915 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment