TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா - விடைகள்) - 4 - TAMIL GK 7

Latest

Wednesday, 14 February 2018

TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா - விடைகள்) - 4

TNPSC General Knowledge Model Questions 
(பொது அறிவு வினா - விடைகள்) - 4


ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி

போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?
பட்டோடி நவாப்

ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா

தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19

தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28

அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை

ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5

1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?
ஜே.ஆர்.டி.டாட்டா

சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா

சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி

பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்‌ஷா

உருக்காலை உள்ள இடங்கள்?
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா

இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே

மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா

நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு

ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)

பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?
ஆண்கள்

இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)

தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்

காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு

நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி.

இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT

சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய

நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா

இலங்கையின் தலைநகர்?
கொழும்பு

இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்

ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ

பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்

ஆஸ்திரேலியாவின் தலைநகர்?
கான்பெரா

தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?
ஜோகன்னஸ்பர்க்

தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன் மண்டேலா

பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா

குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா

எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ

ஜே.பி.எல்-விரிவாக்கம்?
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்

ராஜஸ்தானின் தலைநகர்?
ஜெய்ப்பூர்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்

மலேசியாவின் தலைநகர்?
கோலாலம்பூர்

காஷ்மீரின் கடைசி மஹாராஜா?
ஹரிசிங்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?
இயான் போத்தம்

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது?
ஜூலை 7, வயது 31

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி

டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?
207 கி.மீ

மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?
பிரான்ஸ்

உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்

ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ

பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?
பஞ்சாப்

வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?
ஒட்டப்பிடாரம்

உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?
இந்தியா

கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
பெல்ஜியம்

பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி

மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?
துபாய்

அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?
11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு

தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்

உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?
ஷாங்காய்

தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
எபிகல்சர்

உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா

தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை

இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)

இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா

டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?
ஏடோ

சீனாவின் அன்றைய பெயர் என்ன?
கத்தே

முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
பெனாசீர் புட்டோ

தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)

மால்குடி என்பது?
கற்பனை ஊர்

காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா?
தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்)

கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா?
தவறு

ஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?
கோல்கொண்டா (ஆந்திரா)

பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?
நெருப்பு

எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?
ஆஸ்திரேலியா

பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?
வஞ்சிக் கோட்டை வாலிபன்

குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?
கொள்ளு திண்ண

கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?
குசேலன்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?
விருது நகர் (விருதுப் பட்டி)

உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?
சரி.

M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்?
மதராஸ்

நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?
சரி

சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?
ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)

திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
தின்திருணிவனம்

விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?
முதுகுன்றம்

பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?
88

ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
22

சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?
ஹார்ட்டின் ராஜா

அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?
வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?
ஜான் வில்லியம்ஸ்

1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?
இஸ்ரேல்

பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?
கறுப்பு, வெள்ளை

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?
இந்தியா

குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?
மரியா மாண்டிச்சேரி

அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?
மூளை

எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?
கடலூர்

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
பிரேசில்

மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?
ரவீந்திரநாத் தாகூர்

கார்டெல் என்றால் என்ன?
நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.

கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?
தங்கம், கச்சா எண்ணை

அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?
அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி

உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?
வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா)

ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?
LONDON INTER BANK OFFER RATE

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?
5

தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?
ராஜஸ்தான்

எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?
1862

இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா

ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?
1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு

IOC ன் விரிவாக்கம்?
International Olympic Committee

எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?
1908

கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி

சிங்கப்பூரின் தலைநகர்?
சிங்கப்பூர் சிட்டி

தமிழ்நாடு அரசு சின்னம்?
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்

கேரளா அரசு சின்னம்?
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்

கர்நாடகா அரசு சின்னம்?
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்

ஆந்திரா அரசு சின்னம்?
பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்

ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு எது?
கபடி

கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?
12

கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?
7

மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?
ஆலம் கே என்பவரின் டைனாபுக்

முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?
ஒஸ்போர்ன் (1981)

மடிகணிணிகளின் எடை?
2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை

மடிக்கணிணியின் திரை அளவு?
35 செ.மீ முதல் 39 செ.மீ வரை

வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து

கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே

அரபிக் கடலின் அரசி?
கொச்சி

அதிகாலை அமைதி நாடு?
கொரியா

இந்தியாவின் சுவிட்சர்லாந்து?
காஷ்மீர்

புனித பூமி?
பாலஸ்தீனம்

ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்

மரகதத் தீவு?
அயர்லாந்து

தடுக்கப்பட்ட நகரம்?
லாசா

No comments:

Post a Comment