TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா - விடைகள்) - 3 - TAMIL GK 7

Latest

Wednesday, 14 February 2018

TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா - விடைகள்) - 3

TNPSC General Knowledge Model Questions 
(பொது அறிவு வினா - விடைகள்) - 2

இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி

மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்

டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்

ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்

எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்

நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்

அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்

பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
ஏ.ஜே.கார்னரின்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்

சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
அவாமி முஸ்லிம் லீக்

2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி

பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா

இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)

செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை

புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்

புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை

காமராசர் பிறந்த ஆண்டு?
1903

காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி

அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
காமராசர்

காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
3000

காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
1954

காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்

திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
காமராசர்

“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்

வட இந்திய செய்தித்தாள்களில் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி

பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
காமராசர்

உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி

தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930

தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்

மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
சேலம்

தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)

தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து

வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்

தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்

மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் செய்யக்கூடியது எது?
ரோபோ

செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்

புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3%

1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
போபால்

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1972

எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்

பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்

பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு

போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________ படங்கள் எனப்படும்?
கருத்துசார்

”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
சிம்ம விஷ்ணு

கார் படை மேகங்களானது ___________ மேகங்களாகும்?
செங்குத்தான

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்

யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்

தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு

உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா

தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?
நீலகிரி

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?
ராஜஸ்தான்

சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _________ என அழைக்கின்றனர்?
டுவிஸ்டர்

உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?
ஜெர்மனி

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?
நெய்வேலி

சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?
நீர் மின்சக்தி

தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?
ஆலோசனை வழங்குபவர்

”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?
அந்தமான் நிக்கோபார்

எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?
1978

பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?
சேமிப்பு

எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?
பணம்

ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி

கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
மீஞ்சூர்

போலந்து நாட்டின் தலைநகர்?
வார்சா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?
விம்பிள்டன்

ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்பெயின்

லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
செக் குடியரசு

மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?
கிண்டி

எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?
மதிப்புக் கூட்டப்பட்ட வரி

ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?
4

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?
புதுக்கோட்டை

சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?
1959

கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா

சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்

உலகின் நீண்ட கடற்கரை எது?
மியாமி

தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27 1911

உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்

ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
திட்டம் வகுப்போர்

உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
பசிபிக்

மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
மெக்ஸிகோ (7349 அடி)

விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவிட்சர்லாந்து

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)

எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா

உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன் லேசாப்

மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா

முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
பென்னி குவிக்

”சுதர்மம்” என்றால் என்ன?
கடமை உணர்வு

மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 1

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?
ஹீல்

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?
சந்தால்

No comments:

Post a Comment