தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 01.04.2016 / 02.04.2016 - TAMIL GK 7

Latest

Saturday, 2 April 2016

தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 01.04.2016 / 02.04.2016

தற்கால நிகழ்வுகளின் தொகுப்பு நாள்: 01.04.2016 / 02.04.2016

1.பிரதமர் மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் அமெரிக்காவுடன் ஈர்ப்பலைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு ஆய்வு மையத்தை (லிகோ ) நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது நாள் :31.03.2016.

2. இந்திய சினிமாவில் கமல்ஹாசன் ஆற்றிய பங்களிப்புக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ஹென்றி லாங்லாயிஸ்  விருது வழங்கப்பட்டுள்ளது.

3. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வருகிற ஏப்ரல் 14 முதல் புழக்கத்தில் வரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

4. நான்காவது அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாடு அமெரிக்காவின் தலைநகர் வாசிங்கடனில் 01.04.2016 அன்று தொடங்கியது

5. 200 அண்டுகள் பழமையான ஓவியம் கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் பெருமாள் கோவிலில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது.

6. Facebook, Twitter மற்றும் youtupe போன்ற சமூக வலைதளங்களுக்கு வாடா கொரிய அரசு தடைவிதித்துள்ளது.

No comments:

Post a Comment