General Tamil - TAMIL GK 7

Latest

Sunday, 3 April 2016

General Tamil

11-ஆம் வகுப்பு
தமிழ் ( part 12 )
அழகர் கிள்ளைவிடு தூது
தூது:
தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பாதூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படும்.
தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.
அழகர் கிள்ளைவிடு தூது:
திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
ஆசிரியர் குறிப்பு:
சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.
சொற்பொருள்:
அரி – சிங்கம்
அரன் – சிவன்
அவுணன் – இரணியன்
காயம் – உடம்பு
சேனை – சைனியம்
பண்ணும் தொழில் – காத்தல் தொழில்படி – உலகம்பாதவம் – மருத மரம்பெண் – அகலிகைபாரம் – பளுநாரி – சீதாப்பிராட்டிவேலை – கடல்
இலக்கணக்குறிப்பு:
வன்காயம் – பண்புத்தொகை
அரைத்திடும் சேனை – எதிர்காலப் பெயரெச்சம்
மலர்க்கால் – உவமைத்தொகை
வன்கானகம் – பண்புத்தொகை

No comments:

Post a Comment