இன்றைய தின தற்கால நிகழ்வுகளில் தொகுப்பு நாள் : 30.03.2016
- 1. சென்னை உயர் நீதி மன்றத்திற்கு புதியதாக ஆறு நீதிபதிகளை நியமிக்க குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார் நீதிபதிகள் விவரம்: வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம். வி. முரளிதரன், டி. கிரிஷ்ணகுமார், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ்.
- 2. இந்தியாவில் இருந்து நேரடியாக (முதல் முறையாக) வங்கதேசம் செல்லும் முதல் சரக்கு கப்பல் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் அறிமுகப்படுத்தபட்டது. இது தொடர்பாக 1974 ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரபடாமல் இருந்தது. பிரதமர் மோடி அவர்களின் வங்கதேச பயணத்தின் பொது அவ்வொப்பந்தம் புதுபிக்கபட்டது.
- 3. எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அயின்சாம்ஸ் பல்கலைகழகத்தில் இந்தியா தனது முதல் ஆய்வு மையத்தை நிறுவவுள்ளது . இது அரபு நாடுகளிலேயே ஏற்படுத்தப்படும் முதலாவது ஆய்வு மையமாகும்.
- 4. 2012 ஆம் ஆண்டு கேரள கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுகொன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இத்தாலி நாட்டின் இரண்டு வீரர்களையும் விடுதலை செய்யுமாறு நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நிரந்தர சமரச தீர்ப்பாயத்தில் இத்தாலி அரசு முறையீடு செய்துள்ளது.
- 5. பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ்க்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்த நாட்டு பிரதமர் சார்லஸ் மிச்செல்லுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
- 6. மியான்மரின் புதிய அதிபராக ஹிடின் கியா 30.03.2016 அன்று பதவி ஏற்றார். 50 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ பின்னணி இல்லாத ஒருவர் அதிபராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
ஒருவரிச் செய்தி
- 1. பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் - பெனிக்னோ அகுய்னோ
- 2. ஐ.நா. பொது செயலாளர் - பாண் கி மூன்
- 3. அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் - ரோஸ் காட்டே மோல்லேர்.

No comments:
Post a Comment