
2. ஒலியின் திசைவேகம், காற்றில் விநாடிக்கு 330 மீட்டர்.
3. ஒலிவேகம் நீரில் விநாடிக்கு 1450 மீட்டர்.
4. ஒலிவேகம் இரும்பில் விநாடிக்கு 5000 மீட்டர்.
5. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. ஒலி பரவ ஊடகம் தேவை.
6. ஒளி அலைகள் குறுக்கலைகள் (Transverse waves).
7. ஒலி அலைகள் நெட்டலைகள் (Longitudinal waves).
8. ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.
9 . ஒலி அதிர்வெண்ணின் (Frequency of sound) அலகு ஹெர்ட்ஸ்.
10. ஒலிச்செறிவின் (Intensity of sound) அலகு டெசிபல் (Decibel).
11. நம் காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வெண் 20 - 20,000 ஹெர்ட்ஸ்.
12.20,000 ஹெர்ட்ஸுக்கு மேற்பட்ட ஒலி அல்ட்ராசானிக் ஒலி.
13. வெளவால்களுக்கு அல்ட்ராசானிக் ஒலியைக் கேட்கும் சக்தி உண்டு.
14. ஒரு சாதாரண உரையாடலின் ஒலிச்செறிவு 60 டெசிபல், முணுமுணுத்தல்(Murmur) என்பது 20 டெசிபல்.
15. ஜெட் விமானம் கிளம்பும்போது ஏற்படும் இரைச்சல் 140 டெசிபல்.
16. 90 டெசிபல்லுக்கு மேற்பட்ட ஒலி, ஒலிமாசு எனப்படுகிறது.
17. இசைக் கருவிகள் மூன்று வகை. அவை, தோல்கருவிகள், கம்பிக்கருவிகள், காற்றுக்கருவிகள்.
18. ஒளிச்சிதறல் (Scattering of light) பற்றிய சர்.சி.வி. ராமனின் கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு(Raman Effect) என்று பெயர்.
19. ஓர் அறையில் எதிரொலி கேட்க வேண்டுமானால் அறையின் நீளம் குறைந்தபட்சம் 17 மீட்டர் இருக்க வேண்டும்.
20. மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நீண்ட தொலைவுக்கு ஒலியைக் கேட்கலாம்.
21. தொலைக்காட்சியை ‘ON’ செய்தவுடன் படம் வருவதற்குமுன் ஒலி வந்துவிடுவதற்குக் காரணம் படத்தை உருவாக்கும் Picture tube சூடாக சிறிது நேரம் எடுத்துக்கொள்வது தான்.
22. சிவப்பு நிற ஒளிக்கு அலைநீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.
23. சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.
No comments:
Post a Comment