General Knowledge - பொது அறிவு - ஆண்டுகள் - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge - பொது அறிவு - ஆண்டுகள்

பொது அறிவு - ஆண்டுகள்
1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 1935
2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1935
3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935
4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936
5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 1936
6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1937
7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1937
8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937
9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 1937
10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 1937
11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1937
12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937
13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938
14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 1938
15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 1939
16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940
17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 1942
18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944
19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944
20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 1944

No comments:

Post a Comment