- மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி
- நெடுந்தொகை – அகநானூறு
- இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
- பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி
- திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்துமூவர் புராணம் - பெரிய புராணம்
- ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
- தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
- பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்
- குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
- வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்
- இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
- நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
- பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
- பாவைப்பாட்டு – திருப்பாவை
- தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
- கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்
- தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
- தமிழர் வேதம் – திருமந்திரம்
- பாணாறு – பெரும்பாணாற்றுப்படை
- வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
- புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு
- தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது
- மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி
- வெண்பா,இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை – திருக்குறள்
- செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள்
- காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம்,சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம்,
- புரட்சிக்காப்பியம்,உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் -சிலப்பதிகாரம்

வேர்ச்சொல்லை கண்டறிதல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும். முதலில் கொடுத்த சொல்லை நன்றாக படியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல் தான் வேர்ச்சொல் என்று தீர்மானியுங்கள். உதாரணமாக,
படித்தான் என்பதன் வேர்ச்சொல் கண்டுபிடி
அ) படித்த ஆ) படித்து இ) படி
இதில் வேர்ச்சொல் "படி" ஆகும். ஏனெனில் மேற்கண்டவற்றில் கட்டளை பிறப்பிக்க கூடிய சொல் "படி" ஆகும். கொடுக்கப்பட்ட விடைகளுக்கான தெரிவுகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிப்பதாக உள்ளதோ, அந்த சொல்லே வேர்ச்சொல் ஆகும். உங்களுக்கு எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இல்லை என்றால் மேலும் சில உதாரணங்களை கீழே பாருங்கள்.
வந்தான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)வந்த ஆ)வந்து இ) வந்தனன் ஈ)வா
விடை : ஈ)வா
பார்த்தான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)பார்த்த ஆ)பார் இ)பார்த்து ஈ)பார்க்கிற
விடை : ஆ)பார்
கேட்டான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)கேள் ஆ)கேட்ட இ) கேட்டு ஈ) கேட்டனன்
விடை : அ)கேள்
வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.
பெரியபுராணம்
ஆசிரியர் குறிப்பு:
இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
பிறந்த ஊர் = குன்றத்தூர்
நூல் குறிப்பு;
சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்
இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
“சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
“சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது
“எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.
வேறு பெயர்கள்:
உத்தம சோழப் பல்லவன்
தொண்டர் சீர் பரவுவார்
தெய்வப்புலவர்
இராமதேவர்
மாதேவடிகள்
ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை
ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை? பௌத காப்பியங்கள்?
ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
ஐம்பெருங்காப்பியங்களில் பௌத காப்பியங்கள்
குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ
சமவெளியில் வாழும் பறவைகள்
சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி
எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி (Shortcut)
சுடலை மஞ்சள் செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூங்கி எறிந்தான்
சுடலை - சுடலைக்குயில்
மஞ்சள் - மஞ்சள் சிட்டு
செங்கல்லை - செங்காகம்
பண த்தோடு - பனங்காடை
சமவெளியில் - சமவெளியில் வாழும் பறவைகள்
தூங்கி எறிந்தான் - தூக்கணாங்குருவி
திணைக்குரிய சிறுபொழுதுகள்:
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :
யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி
“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“
1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 –௮
9 – கூ
0 – 0
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள்.
சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
Shortcut:
மணி தரும் வைத்தியரிடம் செல்லலாம், எழுந்து வா
மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத்தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து
No comments:
Post a Comment