
இனப்பெருக்க வகைகளில் ஒன்று - இரண்டாகப் பிளத்தல்
* பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
* பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
* கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி - திரள் கனி
* நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
* மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
* கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
* காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
* மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
* தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
* பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
* கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
* ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை - அரும்புதல்
* ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
* மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
* நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
* மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
* ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
* அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
* பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
* முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
* கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
* கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
* கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
No comments:
Post a Comment