Indian Constitution - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

Indian Constitution

1. அமெரிக்காவில் வழங்கப்படும் உள்நாட்டு இரட்டை குடியுரிமைகள் எவை?
1)அமெரிக்க குடியுரிமை 2) மாகாண குடியுரிமை

2.  இந்தியாவில் மத்திய குடியுரிமை மாநில குடியுரிமை என இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறதா? இல்லை ஒற்றைக் குடியுரிமை மட்டுமே (இந்தியக்குடியுரிமை)

3. ஒற்றைக்குடியுரிமை வழங்கும் நாட்டிற்கு உதாரணம் தருக? இந்தியா கனடா

4.  உறைவிடம் மூலம் இந்திய குடியுரிமை பெற என்ன தகுதி வேண்டும்? 1) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் 2) தாய் அல்லது தந்தையில் யாரேனும் ஒருவராவது இந்தியாவில் பிறந்தவராக இருந்தல் 3)இந்திய அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்னர் (1950க்கு முன்னர்) இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

5.  உறைவிடம் மூலம் இந்தியக்குடியுரிமையை பெறுவது குறித்து எந்த பிரிவு கூறுகிறது? பிரிவு – 5

6. பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்தல் மூலம் இந்தியக் குடியுரிமை பெறுதல் குறித்து எந்த சட்டப்பிரிவு கூறுகிறது? பிரிவு-6

7. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் படத்தில் இந்திய குடிமக்களாக கருதப்படுவர்? 1. குடிபெயர்ந்தவரோ அல்லது அவருடைய பெற்றோரோ அல்லது அவர்களது மூதாதையர்களில் ஒருவரோ 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்கச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும். 2) 19.07.1948க்கு பின்னர் குடிபெயர்ந்து வந்திருப்பின் இந்திய குடிமக்கள் ஆவதற்குரிய பதிவை அதற்கென இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் செய்திருத்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய அதற்கு 6 மாதத்திற்கு முன்னர் இந்தியாவில் குடியிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்.

8. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடியெர்ந்தவர் குறித்து பிரிவு 7 என்ன கூறுகிறது? இப்பிரிவின்படி 1.3.1947ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் இந்தியக் குடிமக்களாக கருதப்படமாட்டார்கள் எனினும் அவ்வாறு பாகிஸ்தான் சென்றவர்கள் மறு குடியமர்வுக்காக அல்லது நிலையாகத் திரும்பி விடுவதற்காக வழங்கப்பட்ட ஒர் அனுமதிச்சீட்டின் கீழ் இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டால் அவர்கள் 19.07.1948ஆம் தேதிக்குப் பின்னர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களாகவும் இந்தியக் குடிமக்களாகவும் கருதப்படுவர்

9. பதிவு செய்தல் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுவது குறித்து இந்தியக் குடியுரிமைச் சரத்து 8 என்ன கூறுகிறது? இப்பிரிவு இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறல் குறித்துக் கூறுகிறது. இதன்படி ஒருவர் தாமோ அல்லது தம் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்திருந்து அவர் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள வெளிநாடு எதிலும் வழக்கமாக குடியிருந்து வருபவராக இருந்தால் இந்தியக் குடிமகனாகவே கருதப்படுவார். ஆனால் அவர் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும். அதாவது அவர் அப்போதைக்கு குடியிருந்து வரும் நாட்டில் உள்ள இந்தியத்தூதுவர் அல்லது வணிக முகவரிடம் உரிய நடைமுறைகளின்படி விண்ணப்பம் செய்து தம்மை ஒரு இந்தியக் குடிமகனாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

10. இந்தியக் குடியரிமையை இழத்தல் குறித்து குடியுரிமைச்சட்டம் பிரிவு 9 என்ன கூறுகிறது? இந்திய அரசியலமைப்புச்சட்டம் தொடங்குவதற்கு முன்பு ஜனவரி 26 1950 ஒர் இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான்

11. இந்திய குடியுரிமையை இழத்தல் தொடர்பாக இந்திய குடியுரிமைச்சட்டம் பிரிவு 10 என்ன கூறுகிறது? இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 5 முதல் 8 வரையிலான பிரிவுகளின் கீழ் இந்தியக் குடிமக்களாகும் ஒவ்வொருவரும் தொடர்ந்து இந்தியக் குடிமக்களாகவே இருப்பர் என பிரிவு 10 கூறுகிறது. ஆனால் அவர்களது குடியுரிமை பாராளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றுவதன் வாயிலாக இழக்கச் செய்யலாம்

12.  குடியுரிமையை ஒழுங்குபடுத்த பாராளுமன்றத்திற்குள்ள சட்டமியற்றும் அதிகாரம் குறித்து பிரிவு 11 என்ன கூறுகிறது? பாராளுமன்றம் சட்டமியற்றுவதன் மூலம் குடியுரிமையை ஒழுங்குபடுத்தலாம் என பிரிவு 11 அதிகாரமளிக்கிறது. இதன்படி 1955-ம் ஆண்டில் இந்தியக் குடியுரிமைச்சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியது. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் குடியுரிமையை அடைதல் இழத்தல் குறித்து கூறுகிறது. மேற்கண்ட சட்டம் கீழ்க்கண்ட 4 முறை திருத்தம் செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் - 1986 ,1992, 2003 , 2005 தொடக்கத்தில் குடியுரிமைச்சட்டம் 1955 காமன்வெல்த் குடியுரிமையையும் தன்னுள் கொண்டிருந்தது. 2003 திருத்தச்சட்டம் மூலம் அது நீக்கப்பட்டது.

13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பின்னர் இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்? 1. பிறப்பால் 2 மரபு வழித்தோன்றலினால் 3. பதிவு மூலம் 4. வெளிநாட்டவர் தன்னை குடிமகனாகக் கோரல் 5. புதிய பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலம் பெறலாம்

14. ஒருவருடைய இந்தியக் குடியுரிமை எப்போது முடிவுறும்? 1. அவர்களாகவே குடியுரிமையை துறத்தல் 2. இந்திய அரசு பறித்தல் மூலம் 3. பிறநாட்டின் குடியுரிமையை பெறுவதன் மூலம்

15.  2004 டிசம்பர் மூன்றிலிருந்து இந்தியாவில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமை பெற என்ன தகுதி வேண்டும்? 1. குழந்தை பிறக்கும்போது பெற்றோர்கள் இருவரும் இந்திய குடியுரிமை பெற்றிக்க வேண்டும் (அல்லது) 2. பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் (அல்லது) 3. அவர்களில் ஒருவர் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக குடிபெயர்ச்சி செய்திருக்கக்கூடாது. 

No comments:

Post a Comment