TNPSC - Important Science Notes - useful for TNPSC Group 2 Exam - TAMIL GK 7

Latest

Thursday, 30 August 2018

TNPSC - Important Science Notes - useful for TNPSC Group 2 Exam

இயக்கங்களின் வகைகள்:
இயக்கங்கள் நேர்கோட்டு இயக்கம்: ஒரு பொருள் நேர்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு  இயக்கம் எனப்படும்.

வட்ட இயக்கம்: 
ஒரு பொருள் வடட்ப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் வட்ட இயக்கமாகும்.

சுழற்சி இயக்கம்: 
ஒரு குறிப்பிட்ட அச்சைப் பற்றி சுழலும் பொருளின் இயக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும்.
எ.கா: பம்பரத்தின் இயக்கம் மின் விசிறியின்   இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம் எனப்படும்.

தன்னிச்சையான  இயக்கம்: 
வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு  வேகங்களில் செல்லும்  பொருளின்  இயக்கம் எனப்படும்.
எ.கா: ஊஞ்சலில்  ஆடும் சிறுமியின் இயக்கம் பூமியைச் சுற்றி வரும் வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் தன்னிச்சையான இயக்கம் எனப்படும்.

எ.கா. மீன் தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம் கால்பந்தாட்டக் களத்திலுள்ள பந்தின் இயக்கம்

ரோபாவின் தந்தை எனப்படுவார் ஐசக் அசிமோ

பொருட்களை பிரித்தல் :
தூற்றுதல் - கலவையில் உள்ள பகுதிப் பொருட்கள் இலேசனாதாக இருந்ததாக அவற்றைத் தூற்றுதல் முறையில் பிரிக்கலாம்.

சலித்தல்- கலவையிலுள்ள பகுதிப் பொருள்களின் பரமனளவு வேறுபாட்டால் அவற்றைச் சலித்தல் முறையில் நீக்கலாம்.

காந்தப் பிரிவு முறை: 
காந்ததால் கவரப்படும் பொருள்கள் கலவையின் பகுதியாக இருந்தால் அவற்றைப் பிரித்தெடுத்தல் பயன்படும் முறையே காந்தப் பிரிப்பு முறை எனப்படும்.

தெரிய வைத்து இறுத்தல்:
தெளிய வைத்த கலவை ஒன்றிலிருந்து தெளிவான திரவப் பொருளை மட்டும்  மற்றொரு கலனுக்கு கண்ணாடிக் குச்சியின் உதவியுடன் மாற்றுதல் தெளிய வைத்து இறுத்தல் எனப்படும்.

ஒரு லிட்டர் கடல் நீரில்  சுமார் 3.5 கிராம் உப்பு கரைந்துள்ளது.

ஆவியாதல் முறையில் பிரித்தல்:
நீருடன் கலந்த உப்பு ஆவியாதல் சுருங்கி  நீர்மமாதல் முறையில் பிரித்தல் - உப்பும் மணலும் கலந்த கலவை.
மழை வரக் காரணமான நிகழ்வுகள் ஆவியாதல் மற்றும் ஆவி சுருங்கி நீர்மமாதல் ஆகியனவாகும்.

ஆற்றலின் வகைகள்:
வேலை செய்த தேவையான திறமையே ஆற்றல் ஆகும்.
ஆற்றலின் அழகு ஜூல் ஆகும்.
வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டுபிடித்தவர் ஜூல்

இயந்திர ஆற்றல்:
நிலையாற்றலும், இயக்க ஆற்றலும் இயந்திர ஆற்றலின்  வகைகள் ஆகும். 

நிலை ஆற்றல் : 
ஒரு பொருள் அதன் நிலையைப் பொறுத்தே அல்லது வடிவத்தை பொறுத்தோ  பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் ஆகும்.

எ.கா. அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியிலுள்ள நீர்  அமுக்கப்பட்ட சுருள்வில் இழுக்கப்பட்ட ரப்பர் வளையம். 

இயக்க ஆற்றல்:
இயக்கத்திலுள்ள பொருள் ஆற்றல் இயக்க ஆற்றல் ஆகும். 
எ.கா. நகரும் பேரூந்து, ஓடும் குதிரை, பாயும் நீர்

காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றால் உற்பத்தி செய்யலாம். 

வேதி ஆற்றல் :
வேதிவினையின்போது வெளிப்படும் ஆற்றல் ஆகும். 
எ.கா. மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேதியாற்றல் ஆகும். 

No comments:

Post a Comment