1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது? 52 ஆண்டுகள்
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்? செம்ஸ்போர்டு பிரபு
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது? கிருஷ்ணா நதி
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா
5 உலக புற்றுநோய் தினம் எது? பிப்ரவரி 4
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்? 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்? 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது? அமெரிக்கா
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது? ஜப்பான்
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 60
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது? குஜராத் (அகமதாபாத்).
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை? 962
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்? 1912
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது? லடாக் விமானத்தளம்.
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது? விவசாயத் துறையில்
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது? முதலாவது திட்டம்
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன? பிரித்வி
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது? 5 ஆண்டுகள்
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 1945
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்? Income
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது? Rate of Indirect Tax
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது? 2002
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது? 4-வது இடம்
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது? சாளுக்கியர்கள்
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது? ஜோகன்ஸ்பர்க்
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது? அமெரிக்கா
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது? அயர்லாந்து
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்? டாக்டர். ஜன் மத்தால்
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 2002
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது? வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன? பிளிம்சால் கோடுகள்
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது? 2003
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? சிக்கிம் (0.05%)
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது? ஏழாவது இடம்
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 640
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு? 74.04% (2001-ல் 64.38%)
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன? 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்? வாரன் ஹேஸ்டிங்ஸ்
41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது? சுவிட்சர்லாந்து
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்? 8.10.1932
43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது? 8
44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது? நெதர்லாந்து
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்? நரசிம்மவர்மன்
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது? இத்தாலி
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன? 65
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது? பத்திரிக்கை
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது? பாதுகாப்புத்துறை
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? கோபால கிருஷ்ண கோகலே
51. உலோகங்களில் லேசானது எது? லித்தியம்
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன? கொன்றைவேந்தன்
54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது? மூதுரை
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது? 47
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது? 61
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது? 42-வது சட்டத்திருத்தம்
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்? 6.8.1952, பிரதமர்
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்? அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர்
61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945
62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது? பிரிவு 315 (Article 315)
63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது? பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது? பிரிவு எண் 136
65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? கர்ணம் மல்லேஸ்வரி
66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்? சரோஜினி நாயுடு
67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்? சிவபாக்கியம்
68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை? 1 கோடியே 20லட்சம் 69
69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது? சீனா
70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது? மகாராஷ்டிரா
71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன? 1,492
72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது? வாஷிங்டன்
73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை
74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955
75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது? 1967
76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? 1968
77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது? 1996
78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன? 12,500
79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்? கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை? மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது? ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு
82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது? மேட்டூர் அணை
83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது? பீஜிங் (சீனா)
84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது? கனடா - வான்கோவர் நகரம்
85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஓடோஸ்கோப் (Odoscope)
86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது? பெங்களூரு
87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது? மகாராஷ்டிரா
88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது? பீகார்
89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு? 18 சதவீதம்
90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு? 2 சதவீதம்
91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? பாலகங்காதர திலகர்
92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு? 7,516 கி.மீ
93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது? அல்பேனியா
94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது? வங்காளதேசம்
95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை? 4,120
96. தமிழக அரசின் மாநில மரம் எது? பனை மரம்
97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 47 வருடங்கள்
98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 19 வருடங்கள்
99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது? AB
100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன? 32,80,483 ச.கி.மீ.
No comments:
Post a Comment